தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவிற்கு கொரோனா இருந்ததால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார்.
இந்நிலையில், தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் அளித்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து கொடியை போலீசார் அகற்றவில்லை. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.
தமிழகம் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்து போது திடீரென வேறு ஒரு காருக்கு மாறினார். ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கார் அதிமுக நிர்வாகி ஒருவரின் கார் என கூறப்படுகிறது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு போலீசார் தடை விதித்த நிலையில், சசிகலா வேறு ஒரு காருக்கு மாறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…