வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளதாகவும் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய நல்லதம்பியிடம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருப்பி அளித்து விடுவதாக இருவரும் உறுதி அளித்தனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை ஐகோர்ட் கிளையில் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன் ஜாமீன் வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்பொழுதும் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…