விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி ! அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.எனவே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி முதல் விருப்பமனு தாக்கல் நடைபெற்றது.இதனையடுத்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.