இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! சுட சுட தயாராகும் மதிய உணவு!
சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டத்தில் சுமார் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
சென்னை : இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெறுகிறது.வானகரத்தில் நடைபெறும் இந்த கூட்டங்களில் சுமார் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
இக்கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு. கடைசியாக கடந்த 2024 மக்களவை தேர்தல் தோல்விக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தோல்விக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறுவதால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கு உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, 8,000 பேருக்கு அசைவ உணவுகளும், 2,000 பேருக்கு சைவ உணவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அசைவ உணவில் சிக்கன், மட்டன், மீன், 65 எனப் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.