அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காமல், அவருக்கு பதிலாக ஜெயகுமார் என்பவரை களமிறங்கியது. இதன் காரணமாக தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால், தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நாளை முக்கிய நிர்வாகிகளுடன் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …