அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 900 பேருடன் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் ய திமுக நிர்வாகிகளான அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுகவில் இணைந்தபின் பேசிய தோப்பு வெங்கடாசலம், வரும் உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் திமுக 100% வெற்றியை ஈட்டும் என்றும் ஈரோடு மாவட்ட திமுக ஒரு ஆலமரம், இதில் நாங்கள் ஒரு பறவைகள் போல் அடைக்கலம் தேடி வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காமல், அவருக்கு பதிலாக ஜெயகுமார் என்பவரை களமிறக்கியது. இதனால் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால், தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் சீட் தராததால் தனியாக நின்று போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம். 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலம் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…