அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனுக்கு சொந்தமான அரிசி ஆலையில் சோதனை….!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மனைவி, மகன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 2016 முதல் 2020 மார்ச் வரை ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.