அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து.. ஐகோர்ட் உத்தரவு!

selvaganapathy

அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

அதாவது, கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த  செல்வகணபதி, மாநிலம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்பின் இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதே சமயத்தில்  கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.  2 ஆண்டு சிறை தண்டனையால் செல்வகணபதியின் எம்பி பதவி பறிபோனது. இதன்பின், கூட்டுச்சதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார். இந்த நிலையில், சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும், இதுதொடர்பாக அரசுத் தரப்பில் மறுஆய்வு செய்யவும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்