அதிமுக முன்னாள் அமைச்சர் உதவியாளர் தந்தை காலமானார்- ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்..!

Default Image

கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் நேர்முக உதவியாளர்  லெட்சுமிநாராயணன் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார்

இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  N. தளவாய்சுந்தரம் அவர்களின் நேர்முக உதவியாளர் M. லெட்சுமிநாராயணன்  தந்தை K. முத்துகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் லெட்சுமிநாராயணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தவித்துக் கொள்வதுடன், முத்துகிருஷ்ணன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்