அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி நாளை ஒத்தி வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து,நீதிபதி காவல்துறை தரப்பில் ஜாமீன் மனு மீது விளக்கம் அளிக்க வரும் 24-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதன்படி,முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,மணிகண்டன் அவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்:”ஆதாரங்கள் இல்லாமலும், விசாரணையை முடிக்காமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள காவல்துறையினர்,”வாட்ஸ்-அப் மிரட்டல்,போட்டோ அனுப்பியது பற்றிய ஆதாரம்,சாட்சி வாக்குமூலம் உள்ளிட்டவைகள் பெறப்பட்டு தான் மணிகண்டன் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்,அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது”,என்று கூறினர்.
இதனையடுத்து,இருதரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி,மணிகண்டன் ஜாமீன் மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…