அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை,தனிப்படை போலீசார் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும்,மேலும்,மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய சொன்னதாகவும் துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால்,சென்னை உயர்நீதிமன்றம்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு,முன்ஜாமீன் வழங்க மறுத்தது.
எனவே,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் தலைமறைவாகி இருப்பதாக வந்த தகவலையடுத்து,2 தனிப்படை போலீசார்,மதுரைக்கு விரைந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.
அதன்படி,முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீசார்,பெங்களூரில் இன்று கைது செய்தனர்.மேலும்,அவரை சென்னை அழைத்து வந்து,ரகசிய இடத்தில் வைத்து 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில்,சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்,17 வது நீதிபதி கிருஷ்ணா அவர்கள் முன்னிலையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…