அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

kamaraj

அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல். 

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்திருக்கிறது.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் தீவிர சோதனை நடத்தி இருந்தனர். அவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்த வழக்கில், 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்