பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!

ADMK - PMK

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு தேர்தல் குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவின் கூட்டணி ஒருபக்கம் வலுவாக இருந்தாலும், மறுபக்கம் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏற்கனவே நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனித்து போட்டியிட போவதில்லை என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டது.

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இடையே ரகசிய சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பானது சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாமக தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதில் ஒரு தொகுதி தென்மாவட்டங்களிலும், மற்ற தொகுதிகள் வடமாவட்டம் மற்றும் மத்திய மாவட்டங்களில் வழங்க வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாமக கேட்கும் தொகுதிகளில் 6 தொகுதிகள் அளிக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக, பாமக விரும்பும் தொகுதிகளாக சிதம்பரம், ஆரணி, கடலூர், தருமபுரி உள்ளிட்ட தொகுதிகளும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதியும் வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்