அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!

விழுப்புரத்தில் அதிமுக முன்னால் அமைச்சர் சி.வி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் கைது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்கக்கோரியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலையின் கீழ் அதிமுக முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முயற்சியை கைவிடக் கோரி அமளியில் ஈடுபட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, சட்டமன்றம் வளாகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025