அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ஆவணங்கள் பறிமுதல்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 16 இடங்களில் ஆவணங்கள் பறிமுதல்
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனை, நாமக்கலில் 12 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மற்றும் ஈரோட்டில் ஒரு இடத்திலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 15-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சுமார் 69 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணக்கில் வராத சுமார் 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025