அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தமிழகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமாகிய சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஓரிரு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பொழுது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…