#BREAKING: அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் காலமானார்..!

Default Image

பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

திமுக முன்னாள் அவைத் தலைவருமான பாடலாசிரியர் புலமைபித்தன்(86) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுமைப்பித்தன் காலை 9:33 மணியளவில் உயிரிழந்தார்.

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். குடியிருந்த கோயில் படத்தில் “நான் யார், நான் யார்” என்ற பாடலை எழுதியவர். எம்ஜிஆர் நடித்த பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை பாடலையும் எழுதியுள்ளார்.

புலமைப்பித்தன் 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றுள்ளார். கடந்த மாதம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025
guava tea (1)