நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி – இபிஎஸ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு பதில் அளித்தார்.
பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார். அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்திருந்தார்.