அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத கமிட்டி அமைத்து, தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது.
அந்தவகையில், நேற்று கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!
அதன்படி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், சிவி சண்முகம், ஜெய்குமார், செம்மலை, வளர்மதி, ஓஎஸ் மணியன், ஆர்பி உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் குறித்தும், எதுபோன்ற வாக்குறுதிகளை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025