அதிமுக உட்கட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும்,
ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால்,அதிமுக கட்சியின் உறுப்பினர்களாக அவர்கள் இல்லாத நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக வழக்கு தொடர உரிமையில்லை என்பதால்,வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் தாங்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும்,உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால்,கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறும் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.இதனால,உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரரான ஆதித்தனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி மனுதாரர்கள் அளித்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025