அதிமுக யாரையும் நம்பி இல்லை! பாஜகவுடன் கூட்டணி தொடரும் – பழனிசாமி அதிரடி

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பேட்டி.

இபிஎஸ் தரப்பு வேட்பாளர்:

epscaandidateerode

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக இரண்டாக பிளவுபடத்துக்கு பிறகு இபிஎஸ் அணி தேர்தல் களம் காண்கிறது. அதுவும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவுடன், அதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரிப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக (இபிஎஸ் தரப்பு), நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக என 4 முனை போட்டியாக உள்ளது.

பாஜவுடனான கூட்டணி தொடரும்:

bjpadmk

இந்த நிலையில், நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக யாரையும் நம்பி இல்லை, அதிமுகதான் பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. பாஜவுடனான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார். அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகள்:

dmkalliance1

இதன்பின் பேசிய இபிஎஸ், மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனைக்கும் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல்போகும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என விமர்சித்து பேசியுள்ளார்.

karunanithipenstatue

பேனா நினைவு சின்னம் குறித்து பேசிய இபிஎஸ், ரூ.1 கோடியில் நினைவு மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைத்துவிட்டு, மீதம் இருக்கும் தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம் எனவும் பேட்டியளித்துள்ளார்.

இபிஎஸ் குற்றச்சாட்டு:

epscomplint

மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்தோ, வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாதது குறித்தோ கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்புவதில்லை என குற்றசாட்டினார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் இழப்பீடு விவகாரத்தில் திமுக, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்