உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை – ராமதாஸ் விமர்சனம்!

Default Image

உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தகவல்.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டிடுவதாக அக்கட்சி தலைவர் ஜி.கே மணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் ஜிகே மணி நேற்று மாலை அறிவித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், கடந்த தேர்தல்களின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் தனித்து போட்டியிட்டனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர்களை வாபஸ் வாங்க வைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

சொந்த கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? என்றும் கூறியுள்ளார். அதிமுகவோடு தற்போது கூட்டணி வைத்தால் பாமகவுக்கு உரிய இடம் கிடைக்காது.  அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். பாமகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்தது. கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் பணிகளில் அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பை தரவில்லை என பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் வந்தன என்றும் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்