அதிமுகவில் ஸ்லீப்பர்செல் கிடையாது., சில எட்டப்பன்கள் உள்ளார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு எந்த தொடரும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கு எந்தவித தொடர்பு இல்லாத நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை கொண்ட அதிமுகவை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதிமுக கொடி. வேறு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது, அதிமுக கொடியை சம்மந்தம் இல்லாத சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்தினால் அது ஒரு சட்டவிரோதம்.

எனவே, இதனை எந்த வகையிலும் அதிமுக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையில் மனு கொடுக்கப்பட்டது. அதன்படி, காவல்துறை தங்களது கடமையை செய்து வருகிறது. சசிகலாவின் வழக்கை உச்சநீதிமன்றமே நிராகரித்துவிட்டது. அதுதான் இறுதி தீர்ப்பு. இதனால் கட்சியும், கொடியையும் சசிகலா சொந்தம் கொண்டாட முடியாது.

காதுல பூ சுத்துறது,அல்வா கொடுக்குற வேலையெல்லாம் தினகரன் செய்ய வேண்டாம். ஏற்கனவே, எல்லாருக்கும் காது குத்தியாச்சி, இதையெல்லாம் அவர்களுடனே வைத்துக்கொள்ள சொல்லுங்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பதில் தெரிவித்தார். எங்களுக்கு யாரும் அல்வா கொடுக்க அவசியம் கிடையாது. அதுமாதிரி யாரும் அதிமுகவில் ஸ்லீப்பர்செல் இல்லை. தலைமை முதல் கீழ்மட்டம் வரை நங்கள் அனைவரும் ஒரே கருத்துடன் தான் இருக்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. இதனால் யாரு நினைத்தாலும் அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போதுவரை அதிமுக எழுட்சியாகவே இருக்கிறது. சசிகலா வருகையால் பதற்றம் தினகரனுக்கே, அதிமுகவினருக்கு அல்ல. சசிகலாவின் பணத்தை தினகரன் கொள்ளையடித்து உள்ளார். இதனால் தான் பதற்றத்தில் உள்ளார். இதன் காரணமாக எங்களை பதற்றத்தில் உள்ளார்கள் என கூறுகிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிமுக நிர்வாகியின் காரில் சசிகலா வந்தது குறித்த கேள்விக்கு, பெரியளவுக்கு நல்லவர்கள் மற்றும் ஆளுமை இருக்கும் இடத்தில், சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என அமைச்சர் பதில் கூறியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலதாவின் உண்மையான தொண்டனாக இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள், அதை விரல் விட்டு எண்ணிவிடலாம் என தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் துண்டு போட்டவர்கள் எல்லாம் தியாகியாக முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்