அதிமுக, திமுகவுடன் நல்ல உறவில் தான் இருக்கிறோம்…!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக உடன் கூட்டணியில் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மேகதாது உட்பட தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் திராவிட கட்சிகளே காரணம், இது குறித்து விவாதம் நடத்த நான் தயார், அவர்கள் தயாரா? ..அதேபோல் பாஜக விரட்டியடிக்கப்படுவதாக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், யார் விரட்டியடிக்கப்படுவார்கள் என தேர்தலில் தெரியும் .
தற்போது அதிமுக உடன் கூட்டணியில் இல்லை. அதிமுக, திமுகவுடன் நல்ல உறவில் தான் இருக்கிறோம். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம், விரைவில் நல்ல முடிவு வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.