ஈரோடு கிழக்கில் அதிமுக – திமுக இடையே தள்ளுமுள்ளு!
ஈரோடு கிழக்கில் திமுக – அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அதிமுக, திமுக இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில, இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக – அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசுப்பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றசாட்டியுள்ளனர். பெரியண்ணா வீதியிலுள்ள கலைமகள் வாக்குச்சாவடி அருகே திமுக, அதிமுக இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.