kumaraguru [Imagesource : Fileimage]
கடந்த மாதம் 19-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து, திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், கள்ளக்குறிச்சி மந்தவெளியில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக மன்னிப்பு கோரியிருந்தேன். நான் பேசிய பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…