இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது
இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், 2024 தேர்தல் திட்டம், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்துக்கு பின், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கட்சி முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 15க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதுவரை, இபிஎஸ் தரப்பு வாதம் கேட்கப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு பதில் வாதத்திற்கு விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.