மார்ச் 9 இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
வரும் மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மார்ச்-9 இலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்திருந்தது.
அதிமுக பொதுக்குழு சார்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவது உள்ளிட்ட கட்சியின் வருங்கால முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும், எதிர்கால தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனை இந்த கூட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.