ஜூலை 1ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு
ஜூலை 1ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என ஓபிஎஸ் அறிவிப்பு.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜூலை 1ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு! pic.twitter.com/OuCCnEvFJ2
— O Panneerselvam (@OfficeOfOPS) June 24, 2023