எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதிமுக மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆக.20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான இலச்சினை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். மேலும், காலியாக உள்ள மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.