அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை 4 மணிக்குஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த கூட்டமானது அவசரமாக கூட உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணியில் இருக்கும் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில், அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…