தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயுத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், அதிமுக 50வது ஆண்டு விழா பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல், கூட்டணி, சசிகலா ஆடியோ விவகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ல் நடைபெறும் என அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) July 5, 2021