நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா? என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தங்களுக்கு (அதிமுக) உரிமை பறிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிகக்காததற்கும் எதிர்த்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில், இபிஎஸ் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் உடன் ஓ.பன்னீர்செல்வம் பேசினார் என குற்றம் சாட்டினார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘ நேற்று நடைபெற்ற போராட்டம் எனக்கு எதிராக நடைபெற்றதாக நான் கருதவில்லை ‘ என்று குறிப்பிட்டார்.
மேலும், இபிஎஸ் கூறிய குற்றசாட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘ இந்த குற்றச்சாட்டிற்கு நேற்றே எனது ஆதரவாளர்கள் பதிலளித்து விட்டார்கள். நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா என சவால் விட்டு இருக்கிறர்கள்.’ என ஓபிஎஸ் பதில் அளித்தார்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…