வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக…! வீடியோ வெளியீடு…!
திருவெல்லிக்கேணி தொகுதியில், அதிமுக சிறுப்பாண்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி தொகுதியில், அதிமுக சிறுப்பாண்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. வாக்காளர்களுக்கு ரூ.500 பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.