பரபரப்பான அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்;இன்று வேட்புமனு தாக்கல்!

Default Image

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை(காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) நடைபெறவுள்ளது.மேலும்,

வேட்பு மனு மீதான பரிசீலனை:

5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி

வேட்பு மனு திரும்பப் பெறுதல்:

6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.

தேர்தல் நாள்:

7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு:

8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்,தொடர்ந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்