9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை..!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிமுக ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் 9 மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்த இருந்த நிலையில், அதிமுக அவைதலைவர் மதுசூதனன் உயிரிழந்ததை தொடர்ந்து, ஆலோசனை நடத்துவது ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025