ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ஓபிஎஸ்!
சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு நேற்று முன்தினம் காவல் துறை சார் ஆய்வாளர்,நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது மிகுந்த அதிர்ச்சி என அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,சென்னை,கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை நிமித்தமாகவே ஆளுநரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.