திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் எனவும், மு.க ஸ்டாலின் தான் முதல்வராவார் எனவும் இந்திய கமியூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் எனுமிடத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் உயிலுமுத்து அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, அவர் கொள்கை சார்ந்த கூட்டணி தான் திமுகவின் கூட்டணி எனவும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில், உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வேளாண் சட்டத்தை எதிர்ப்பவர், அதே சமயம் முதல்வர் எடப்பாடி பழனி சாமி வேளாண் சட்டத்துக்கு ஆதரவானவர் எனவே அது முரண்பட்ட கூட்டணி எனவும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…