அதிமுகவின் ஆலோசனை கூட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு
வரும் 21-ஆம் தேதி அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.
அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஓபிஎஸ் அறிவிப்பு.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் 21-12-2022 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/3if9NXjo2Q
— O Panneerselvam (@OfficeOfOPS) December 17, 2022