ஜூன் 12-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்
ஜூன் 12-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில்,ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.