ADMK: அதிமுக தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாரும் 19ம் தேதி வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதன்படி, தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன் மீது அதிமுகவின் இன்பத்துரை புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், உதவியாளர்கள் ஓட்டுநர்களின் செல்போன் உளவுத்துறை மூலம் ஒட்டுகேட்கப்படுவதாகவும், இதற்காக இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மேலும் தேர்தலுக்கான யூகங்களை தினமும் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தும் விதமாக செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாகவும், எனவே, உளவுத்துறை ஐஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எனது, எனது மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாகவும், அதனை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பகிரப்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல், மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள் எனவும் கூறியிருந்த நிலையில், அதிமுகவினர் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…