#Breaking:முக்கிய கோரிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!

கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் தமிழக மீனவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் மட்டுமே தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் 1 கோடி கேட்டுள்ள விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு கடிதம். pic.twitter.com/FMo2TrSiMr
— AIADMK (@AIADMKOfficial) April 13, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025