#Breaking:அதிமுக செயலாளர்கள் கூட்டம்;ஓபிஎஸ் புறக்கணிப்பு..!
சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார்.
சென்னை,ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.அந்தக் கூட்டத்தில்,சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.அதன்படி,மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார்,ஆதிராஜன்,கே.பி.கந்தன்,தி.நகர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும்,இந்தக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்,கட்சி கொறோடாவை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் சிக்கல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
இந்நிலையில்,இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். இதனால்,அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.