சற்று நேரத்தில் முதல்வர் வேட்பாளார் அறிவிப்பு.??இபிஎஸ்கே அதிக வாய்ப்பு??

Published by
kavitha
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு  சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது.
இவ்விவகாரத்திற்கு  இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது.அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.,7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி,  இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்க  அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் சுமார் 18 மணி நேரம்  மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்,  ஒபிஎஸ் – இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர்.
இந்த ஆலோசனை அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்த நிலையில்
இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் குறித்தும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் வருகை தர தொடங்கி உள்ளனர்.
Published by
kavitha

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

9 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago