அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
நீண்ட நாட்களாக அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். இந்த அறிவிப்பையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.