தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அதிமுக – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.அதில் முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும். இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்று கூறினார்.
மதுரையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.இந்த மாநாட்டிற்கு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க நிறுவனர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முத்தரையர்கள் பெருமைக்குரியவர்கள்.
கலை, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். மண்ணையும், மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்குகின்றனர்.நானும் ஒரு விவசாயி என்பதால், முத்தரையர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும்.முத்தரையர் சமுதாய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு அரசு துணை நிற்கும் என்றார்.
இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு.அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடைய செய்யவேண்டும்.அவர்களுக்கு தேவையான கல்வி ,வீடு ,சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு எங்களுடைய அரசு செயலாற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர் ,செல்லூர் ராஜு,திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025