#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கடந்த 2016-21 ஆம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக,அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவரது மனைவி மல்லிகா,மகன்கள் சசி மோகன்,சந்திர மோகன்,மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதன்பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது கேபி அன்பழகன் பெயரிலும்,அவரது உறவினர் பெயரிலும் பல கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால்,முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை எனவும்,குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.ஆனால்,குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று மீண்டும் கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை முடித்து,விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.