அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது.
இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதம் முன் வைத்தார். பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் வைத்திலிங்கம் தரப்பில் கூறினர்.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகளை தெரிவித்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…