அதிமுக 2,3 தரப்பு என சொல்ல முடியாது..! அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான்..! – எடப்பாடி பழனிசாமி

ADMK Chief Secretary Edapadi Palanisamy

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனை இன்றி மாநாட்டை நடத்தி அதிமுக கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம்.

அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான், எங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் திமுக மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை தரவில்லை,  ஆனால் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் திமுக மாநாட்டிற்கு பாதுகாப்பு எப்படி என்பதை பார்க்க உள்ளோம்.

பல இடங்களில் குடிநீருக்காக போராட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீர்வு காண முடியவில்லை; மேட்டூர் அணை நீர் குறைந்து வருவது குறித்து முதலமைச்சர் கவலைப்படவில்லை; தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்