#Breaking : இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு.! அண்ணாமலை அறிவிப்பு.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு. இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் நன்றி. – பாஜக அறிக்கை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிற்க வைக்கப்பட்டு இருந்த செந்தில் முருகன் என்பவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு ஆதரவு எனவும், திமுகவை எதிர்க்க இபிஎஸ் – ஓபிஎஸ்இணைந்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த பாஜக தற்போது தங்கள் தேர்தல் நிலைப்பட்டு ஆதரவு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், சட்டபூர்வமாக அதிமுக வேட்பாளரை முன்னிறுத்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது நலன் கருதி தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் தங்கள் நன்றி எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவை எதிர்த்து அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தங்கள் தொடர்களையும் கேட்டுக்கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் @AIADMKOfficial வேட்பாளர் திரு. கே.எஸ். தென்னரசு அவர்கள் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம். pic.twitter.com/70j1UzKCG4
— K.Annamalai (@annamalai_k) February 7, 2023